GermanySri LankaUTC/GMTCanada-TorontoEmirates.DubaiAUS-Syd
   
 
  முகப்பு பக்கம்

தந்தை
பெரியார்

தோற்றம் - 17-9-1879
மறைவு-24-12-1973

ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாக்க் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாக்க் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்), அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

பகுத்தறிவால் மாற்றியவர்

நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை - இன்னொரு வகைச் சமய நம்பிக்கையால், மதப்பற்றால் மாற்றியவர்களை சிலர் உண்டு என்தன்றி, மத நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்திட்ட சமுதாய வாழ்வை, பகுத்தறிவு அடிப்படையில் - மூட நம்பிக்கையின் சாயலின்றி மாற்றியமைத்தவர்களை இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

புத்தர் போன்று ஓரிருவர் பகுத்தறிவைப் பயன்படுத்திப் பல உண்மைகளை நிலைநாட்டினர் எனினும், அவர்தம் கொளைகையைப்பரப்பிடும் பணியும் சமய வடிவம் கொண்ட போது- சில நம்பிக்கைகளைக்கொண்டதாகவே நிலைப்பெற்றுள்ளத்தை அவர் அறிந்திருந்தார்.

ஆயினும் மத நம்பிக்கைகள் - நல்லறிவுக்கும் - தெளிவுக்கும் முட்டுக்கட்டை ஆவதை எண்ணி அவற்றை அடியுடன் நகர்த்திடும் நெறியில் தமது அறிவைப் பயன்படுத்தினார்.

இந்த முயற்சி - கா வெள்ளத்தால் ஏற்பட்ட பழமைப் பிடிப்பிலிருந்து, மனித உள்ளத்தை - அறிவின் துணைகொண்டு விடுவிப்பதாகும். அது எளிதன்று. பனிமலையில் ஏறுவது போன்றும் கடுமையான சோர்வினைத்தரும் அறிவுப் பணியாகும். எனினும், பெரியார் தம்மை அந்த எதிர்நீச்சல் பணிக்கே ஒப்படைத்துக்கொண்டார்.

அதன் இயல்பை அறிந்திருந்த காரணத்தாலேயே - அவர் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. கண்டனம் கண்டு மயங்கவில்லை, தடைகள் கண்டு துவளவில்லை, பயன்குறைவு கண்டு வெகுளவில்லை.

கல்லாமையால் விளையும் இழப்பு பலவென்றாலும் அதனால் வாய்த்ததொரு தனிப்பெரும் நன்மை, பெரியாரின் இயற்கை மதி நுடபம், பயிற்சி முறைக் கல்வியால் மழுங்கிடும் நிலைக்கு ஆளாகாத்தும், த்த்தம் அறிவையும், அதன் தெளிவையும் நம்பாது, ஏட்டில் கற்றதை மட்டுமே நம்பி ஏற்று, அதை உரைப்பதிலேயே பெருமை தேடும் மனப்பான்மைக்கு அவர் ஆளாகாத்தும் ஆகும்.

ஆம்! கற்ற்றிந்த மேதைகள் எடுத்தியம்பவும், பரப்பவும் முன்வராத, முன்வரத் துணியாத கொள்கைகளுக்காக, வாதாடவும், போராடவும், பரப்பவும் பெரியார் முன்வந்தார். அதையும் பாமர மக்களுக்கு விளங்கும்படிப் பரப்ப முன் வந்தார். அதுவும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு வளையம் கட்டிய போதும் தொடர்ந்து அஞ்சாது பணிசெய்ய முன்வந்தார்.

எதிர்ப்பு- கண்டனம் - தாக்குதல் - கல்வீச்சு - செருப்பு வீச்சு - முதலியவற்றைச் சந்திப்பது அவருக்குப் பழக்கமாயிற்று. அதனால் மக்களின் அறியாமையே அவருக்குகப் புலனாயிற்று. அதுவே அவருக்கு, அவரது பகுத்தறிவுப் பணி எவ்வளுவு முக்கியமானது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி, அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. எதர்ப்பு - பால் பாயசம் பருகுவது போன்று அவரது ஆர்வத்தை வளர்த்தது.

About Periyar

Born                :        September 17, 1879
                                 Erode, Tamil Nadu, India

Died                 :        December 24, 1973
                                 Tamil Nadu, India
 
Occupation      :        Trader, Social Worker

Spouse            :        Nagammal, Maniammai


What is the mission of my life?
I have undertaken the service of reforming the Dravidian society and convert it into a society fully endowed with self-respect and dignity. I am wholly engaged with that task and dedicated to this great casue.

Whether I am “qualified” for that service or not, I am emboldened to under take the same and continue to do it, because no one else has come forward to do that thankless job.

As I have no other attachment ( concern ) and all my principles, policies and programmes are chaclked out only in the light of rational thought. Hence I am more more qualified to undertake this work, service.

More info at:

http://groups.google.com/group/thanthaiperiyar
Copyright © 2008 பெரியார்.de.tl

நான் யார்
 
ஈ.வே. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத்திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு “யோக்கியதை” இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராத்தினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாத்தாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடைவன் என்றே கருதுகின்றேன்.

யுனஸ்கோ
 
பெரியார். புத்துலக தொலை நோக்காளர்.
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூட நம்பிக்கை. அர்த்தமற்ற சம்பிரதாயங்கள்
மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி
கடவுள் மறுப்பு
 
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
குழுமம்
 

Thanthaiperiyar
Subscribe to தந்தை பெரியார்
e-mail:
Thanthaiperiyar Group
Subscribe to GermanTamil
Germantamil Group
விளம்பரம்
 
1und1

இந்த இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்கள் பிரசுரிக்க நீங்கள் தொடர்புகொள்ளலாம்!

 

Counter

Copyright © 2008 பெரியார்.de.tl

eXTReMe Tracker
Diese Webseite wurde kostenlos mit Homepage-Baukasten.de erstellt. Willst du auch eine eigene Webseite?
Gratis anmelden