தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். 95 ஆண்டுகள் வாந்தார் என்றாலும், அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். அறியாமையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்துப் போராடியவர். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியவர். எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமல், சமூக, பொது வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.

அவரின்நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லம் நினைவு இல்லமாகவும், கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

More info at:

http://groups.google.com/group/thanthaiperiyar
Copyright © 2008 பெரியார்.de.tl